வியாழன், 20 செப்டம்பர், 2012

வடக்கின் முதலமைச்சர் நாணே - டக்ளஸ்


அடுத்த வருடம் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராக அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தனக்குள்ள விருப்பத்தை ஏற்கனவே அரசாங்கத்திடம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் இதனடிப்படையில் அமைச்சரவையில் இருந்து எதிர்காலத்தில் விலக போவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
வடமாகாண சபையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் இதற்காக அரசாங்கம் பெரும் பங்களிப்புகளை வழங்கியுள்ளதாகவும் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்து, தென் பகுதி மக்களுடன் சிறந்த தொடர்புகளை கொண்டிருப்பதற்காக தான் ஏற்கனவே அர்ப்பணிப்புகளுடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய இலங்கை உடன்படிக்கை உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை –டக்ளஸ்
இந்திய இலங்கை உடன்படிக்கையானது உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
1987ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் திகதி அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவிற்கும், அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
தமிழ் ஆயுதப் போராளிகள் சரணடைவதாகவும், மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்குவதாகவும், வடக்கு கிழக்கிலிருந்து படையினர் வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், இந்த உடன்படிக்கையானது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதே தவிர, உரிய நோக்கத்தை பூர்த்தி செய்யவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மக்களை சில அரசியல்வாதிகள் பிழையாக வழிநடத்திய காரணத்தினால் நாட்டில் யுத்தம் ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான மரண அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டியது நாம் அனைவரினதும் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக