இந்த சம்பவம் யாழ்ப்பாணம் ஏழாலையில் உள்ள பிரபல்யமான ஆரம்பப் பாடசாலை ஒன்றில் இடம் பெற்றுள்ளது.
இது போன்று குறித்த ஆசிரியர் ஏற்கெனவே மூன்று மாணவர்களை தாக்கி காயங்களுக்கு உள்ளாக்கியதாகவும் பெற்றோர்கள் இது சம்பந்தமாக அதிபரிடம் முறையிட்ட போதிலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையெனவும் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பிட்ட ஆசிரியர் பாடசாலைக்கு பயிற்சி ஆசிரியராக வந்துள்ளதாகவும் இவரே இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும் பெற்றோர்கள் மேலும் விசனம் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக