புதன், 1 மே, 2013

மன்னாரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின கூட்டம் (படங்கள்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாபெரும் மே தினக்கூட்டம் இன்று 01ஆம் திகதி காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.

குறித்த கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் வி.எஸ்.சிவகரன், மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகர், சர்வமதத்தலைவர்கள், விவசாய, மீன்பிடி, வர்த்தக சங்கங்களின் பிரதி நிதிகள், பொது மக்கள் என பல நூற்றுக் கணக்காணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது தொழிலாளர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் தொடர்பாகவும் தற்போதைய அரசியல் நிலவரம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதிவு தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் அரசியல் பிரமுகர்களினால் உரையாற்றப்பட்டது.

பகல் 12.30 மணிவரை குறித்த மே தின கூட்டம் இடம் பெற்றது.

இதேவேளை வவுனியாவில் மேதின ஊர்வலத்தினையும் கூட்டத்தினையும் புதிய ஜனநாயக மார்சிச லெனின் கட்சியும் 7 தொழிற்சங்கங்களும் சேர்ந்து நடாத்தியிருந்தன.

கண்டி வீதியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பித்த ஊர்வலம் பஸார் வீதி வழியாக நகரசபை மண்டபத்ததை வந்தடைந்திருந்தது.

இதனையடுத்து நகரசபை மண்டபத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் நி. பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் சட்டத்தரணி சோ. தேவராஜா, வீதி பராமரிப்பு தொழிலாளர் சார்பாகக. மகேந்திரன், சுதேசிய சிறு உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் ந. தேவகிருஸ்ணன் உட்பட பலரும் உரையாற்றியிருந்தனர்மன்னாரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின கூட்டம் (படங்கள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக