ஞாயிறு, 5 மே, 2013

மாகாணங்களுக்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும் - ரீ.எம்.வீ.பீ

மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென கட்சி தீர்மானம் நிறைவேற்றியதாக கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி மாகாணங்களுக்கு பூரண அதிகாரங்களை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆதரவளிக்கும் தெற்கு கட்சிகள் குறிப்பாக இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து கொள்ளத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவதனை வரவேற்பதாகவும், கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து தீர்மானிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக