ஞாயிறு, 5 மே, 2013

அசாத் சாலி வாயை மூடிக்கொண்டு இருக்க உடன்பட்டால் விடுதலை என அரசு அழுத்தம்.

அசாத் சாலி வாயை மூடிக்கொண்டு இருக்க உடன்பட்டால் விடுதலை என அரசு அழுத்தம் கொடுப்பதாக அரசாங்கத்தின் முக்கிய தரப்பொன்றிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

"நீரிழிவு நோயாளியான நான் உணவு உண்ண மாட்டேன்" என அசாத் உண்ணாநோன்பு மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் அசாத்தின் சட்டத்தரணியிடம், "நிலைமை என் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது" என சட்டமா அதிபர் தெரிவித்திருப்பதாக கொழும்பில் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.

அசாத் சாலியை கைது செய்து தேவையற்ற சிக்கலை ஏற்படுத்த அரசு தலைமைக்கு பெரியளவில் ஆர்வம் இல்லை. ஆனால் இதை செய்து அவரது வாயை மூடசெய்யுங்கள் என அரசில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் அரசு தலைமையிடம் பெரிதும் வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிய வருகிறது.

இதே வேளை CIDயினால் கைது செய்யப்பட்ட அசாத் சாலி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 55 ஆவது வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என கொழும்பில் பொலிசார் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக