யாழ். தீவகப் பகுதியில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், திணைக்களங்களில் பணியாற்றும் ஊழியர்களின் விபரங்களை படைப் புலனாய்வாளர்கள் திரட்டிவரும் நிலையில் ஊழியர்கள் பெரும் பீதியடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்மாதத்தின் ஆரம்பத்திலிருந்து திணைக்களங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வரும் படைப் புலனாய்வாளர்கள் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் விபரங்களை தமக்கு முழுமையாக வழங்குமாறு வற்புறுத்தி வருகின்றனர்.
இதில் குறிப்பாக முழுப் பெயர், விலாசம், மற்றும் தொலைபேசி இலக்கங்கள், அடையாள அட்டை இலக்கம், குடும்ப உறுப்பினர் தொகை என்பன இடம்பெற வேண்டும் எனவும் கோரப்படுகின்றது.
இவ்வாறு விபரங்களை புலனாய்வாளர்களுக்கு வழங்கிய சிலர் தமது தொலைபேசி இலக்கங்களக்குப் பதிலாக தாம் கடமையாற்றும் நிறுவனங்களினதும், திணைக்களங்களினதும் தொலைபேசி இலக்கங்களை வழங்கியிருக்கின்றனர்.
இதனையடுத்து, அவ்வாறு வழங்கியவர்களை அழைத்த புலனாய்வாளர்கள் எதற்காக தனிப்பட்ட இலக்கங்களை கொடுக்கவில்லை என விசாரித்துள்ளனர். இந்நிலையில் ஊழியர்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்த நாட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினாலும் தீவகத்தில், படைப் புலனாய்வாளர்களினதும், ஒட்டுக்குழுக்களினதும் அடாவடிகள் முடிவுக்கு வரவில்லை.
இதன் காரணமாகவே தீவகத்திலிருந்து இடம்பெயர்ந்து யாழில் வாழும் மக்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக