தனது அமைச்சர் பதவியைத் தக்கவைக்க முஸ்லிம் மக்களை ஏமாற்றிய இரவூ ஹக்கீம்!நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பார்கள். நாய் வாலை மட்டுமல்ல ஆல மரத்தைப் பலா மரமாக ஆக்க முடியாது. நீலநிறக் காகத்தை பச்சை நிறக் கிளி போல் பேச வைக்க முடியாது. கருணை இல்லாத மூர்க்கனைச் சீர்படுத்த இயலாது.
இந்த உண்மைகளை எடுத்துச் சொல்லும் ஒரு தனிப் பாடல் இருக்கிறது. அவ்வையார் பாடியது. இவர் சங்க கால அவ்வையார் அல்ல. பிற்காலத்தில் கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி வாழ்ந்த 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
ஆலைப் பலாஆக்க லாமோ அருஞ்சுணங்கன்
வாலை நிமிர்த்த வசமாமோ - நீலநிறக்
காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணையிலா
மூர்க்கனைச் சீர் ஆக்கலா மோ.
நாய், காகம், கருணையிலா மூர்க்கன் இவற்றோடு அவ்வையார் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இரவூப் ஹக்கீமையும் சேர்த்திருக்கலாம். அவருக்குப் பழக்கப்பட்டுவிட்ட - கை வந்த கலையான - சந்தர்ப்பவாத அரசியலில் இருந்து அவரை மாற்ற முடியாது. அடே எங்கப்பா? தேர்தலின் முன்பும் தேர்தலின் போதும் தேர்தலுக்குப் பின்னரும் என்னமாய் வசனம் பேசினார்? என்னமாய் நடித்தார்? உலக மகா நடிகன் பட்டத்தைத் தாராளமாக அவருக்குக் கொடுக்கலாம்! தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான பின்னர் மனிதர் பாம்புக்கு ( இராசபக்சே) தலையும் மீனுக்கு (சம்பந்தர்) வாலும் காட்டிக் கொண்டிருந்தார்.அரசியல் பேரத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பெருமை ஏற்கனவே ஹக்கீமுக்கு உண்டு. இம் முறை அவர் நடத்திய அரசியல் பேரத்துக்கு முனைவர் பட்டமே கொடுக்கலாம்!
சுற்றிச் சுற்றியும் சுப்பர் கோடிக்குள் என்ற மாதிரி இரவூ ஹக்கீம் நடத்திய பேரப் பேச்சுக்கள் எத்தனை முழு அமைச்சர் பதவி எத்தனை அரை அமைச்சர் பதவி என்பதைச் சுற்றியே இருந்தது.
இப்போது தேர்தல் மேடைகளில் இரவூ ஹக்கீம் வீரா வேசத்தோடு பேசிய பேச்சுக்களைப் பார்ப்போம்.
பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில்
அரசு ஒரு பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்து தற்போது தேர்தல் எனும் பயங்கரவாதத்தை அரங்கேற்றிக் கொண்டு வருகின்றது. இத்தேர்தல் நாட்டு மக்கள் விரும்பும் தேர்தலல்ல. இவ்வாறு முன்கூட்டி நடத்துவதனூடாக நாட்டு மக்கள் தன்னோடு இருப்பதாக அரசு சர்வதேசத்துக்குக் காட்ட முனைகிறது. அந்த வியூகம் தோல்வியடையப் போகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை இந்த அரசாங்கம் கணக்கில் எடுக்காமல் கடந்த ஒன்றரை வருட காலத்தில் நான் பட்ட அவஸ்தைகளுக்கு இத்தேர்தலின் மூலம் முடிவு கட்டலாம். எனவே சமூகத்தின் இருப்பையும் பலத்தையும் சர்வதேசத்துக்குக் காட்டுவோம்.
அடேயப்பா! எவ்வளவு உரோசமான பேச்சு. "இவ்வாறு முன்கூட்டி நடத்துவதனூடாக நாட்டு மக்கள் தன்னோடு இருப்பதாக அரசு சர்வதேசத்துக்குக் காட்ட முனைகிறது. அந்த வியூகம் தோல்வியடையப் போகிறது" என்று எந்த நேரத்தில் சொன்னாரோ அவரே அந்த வியூகத்தை வெற்றியடைய வைத்துவிட்டார்!
இந்திய குடியரசுத் தலைவரைச் சந்தித்த சனாதிபதி இராசபக்சே "கிழக்கு மாகாண மக்கள் என்னோடுதான் இருக்கிறார்கள்" என்று அடித்துச் சொல்லி இருக்கிறார். ஏன் சொல்ல மாட்டார்?இரவூ ஹக்கீம் வெட்கம், மானம் எல்லாவற்றையுமே காற்றில் பறக்கவிட்டு ஆளும் கட்சியோடு அய்க்கியமான பின்னர் மகிந்த இராசபக்சே அப்படித்தான் பேசுவார்.
இராவூவ் ஹக்கீமின் சண்ட மாருதத் தேர்தல் பேச்சுக்கள் இன்னும் இருக்கின்றன. அவற்றையும் பார்த்துவிடுவோம். புற்றுக்குள் இருக்கும் பாம்பு வெளியில் வந்தால்த்தானே அது என்ன பாம்பு என்று அறிய முடிகிறது.
* காத்தான்குடி தேர்தல் பரப்புரைக் கூட்டம்
முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரால் பெற்றுக்கொள்வதற்காகவே நாம் தனித்து போட்டியிடும் தீர்மானத்தை எடுத்தோம். கிழக்கில் எங்களுக்கு அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆனால் நடந்தது என்ன? இரவூ ஹக்கீம் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தாது கோட்டை விட்டு விட்டார். கிழக்கு மாகாண சபை முதல்வர் பதவிக்குச் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு வென்ற நஜீப் அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டுள்ளார். நியமித்த கையோடு இராசபக்சே சத்தியப் பிரமாணமும் செய்து வைத்து விட்டார். இப்போது இரவூ ஹக்கீம் ஒரு புதுக் கரடியை விடுகிறார். கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் முஸ்லிம் காங்கிரசுக்குக் கிடைக்குமாம். ஆனால் அரச வட்டாரங்கள் இரவூ ஹக்கீம் பகல்கனவு காண்கிறார் எனச் சொல்கிறது. "கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் நஜீப் அப்துல் மஜீத்தே தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் முதலமைச்சராகப் பதவி வகிப்பாரெனவும் எக்காரணம் கொண்டும் பதவி பங்கீடு செய்யப்படமாட்டாதென்றும் அரசின் அதியுயர் மட்டமொன்று நேற்று உறுதிப்படுத்தியுள்ளது." இரண்டரை ஆண்டு முடியக் காலம் இருக்கிறது என்ற துணிவில்தான் ஹக்கீம் இந்தப் பொய்யைத் துணிந்து சொல்கிறார்.
* பொத்துவில் அருகம்பே வீதியில்
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் பதவியில் நான் இருந்தும் எமது கட்சியை மாற்றான் தாய் மகனாகவே அரசாங்கம் கவனித்து வந்தது. மந்திரிப் பதவி ஒரு பொருட்டல்ல. அப்பதவி எனக்கு கடிவாளமுமல்ல. முஸ்லிம் காங்கிரசின் வெற்றியைத் தடை செய்து கிழக்கில் சிறுபான்மையினராக வாழும் சிங்கள சமூகத்தை வெளியுலகிற்கு சக்தியுள்ளதாக காட்டுவதே அரசாங்கத்தின் நோக்கம்.
அரசை விமர்சிக்கிறோம். எல்லையுடன் பேசுகிறோம். அரசு அதனை ஜீரணிக்க வேண்டும். அடாவடித்தனம் அச்சுறுத்தலால் மு.கா.வை அடக்கலாம் என்பது பகற்கனவுஇரவூ ஹக்கீமின் சந்தர்ப்பவாத - அமைச்சர் பதவிகளுக்காகப் பல்லிளிக்கும் அரசியலினால் பகற் கனவு நிசக் கனவாக இப்போது நடந்தேறியுள்ளது. கிழக்கில் சிறுபான்மையினராக வாழும் சிங்கள சமூகத்தை வெளியுலகிற்கு சக்தியுள்ளதாக காட்டும் அரசாங்கத்தின் நோக்கத்தை சாட் சாத் இரவூ ஹக்கீமே நிறைவேறி வைத்துள்ளார்!
* சம்மாந்துறைப் பிரதான வீதி பரப்புரைக் கூட்டம்
முஸ்லிம் காங்கிரசின் தீர்மானத்தினால் அரசு தடுமாறிப் போயுள்ளது. அதன் வெளிப்பாடே எமது கட்சியின் வெற்றியைத் தடுப்பதற்காக பல்வேறு கோணங்களில் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. முகா தனித்துப் போட்டியிடுவது அரசை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. பாலமுனைப் தேர்தல் பரப்புரைக் கூட்டம்
முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் வியூகம் ஆப்பிழுத்த குரங்காக அரசை மாற்றியுள்ளது.
* கிண்ணியா, குறிஞ்சாங்கேணி தேர்தல்
பொம்மை ஆட்சியொன்றில் கைகொட்டி வாய்பொத்தி மவுனியாக இருந்து வர எமது கட்சி தயாரில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தனித்துக் கேட்பது குறித்து நாடே மகிழ்ச்சியடைகிறது. எமது தனித்துவம் காக்கப்படும். தனித்துவமாவது மண்ணாங்கட்டியாவது. இன்று சிங்கள - பவுத்த பேரினவாதத்துக்குள் முகா கரைந்து போய்விட்டது. "பொம்மை ஆட்சியில் கைகட்டி வாய்பொத்தி மவுனியாக இருந்து வர" முகா முடிவு செய்துவிட்டது. நக்கினார் நாவிழந்தார் என்பார்களே அதுதான் நடந்தேறியுள்ளது.
* வாழைச்சேனை பரப்புரைக் கூட்டம்
ஆட்சி அதிகாரங்களை வைத்துக்கொண்டு அரசாங்கம் எங்களை, நாங்கள் இணைந்த காலத்திலிருந்தே மாற்றான் தாய் மனப்பான்மையோடுதான் நடத்தி வருகின்றது. நாடு, நகர அபிவிருத்திச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது மாகாண சபை உறுப்பினர்கள் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடல் இடம்பெற்றது. அப்போது எமது உறுப்பினர்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டனர். ஆளுநர்களாகவும் அரச அதிபர்களாகவும் சிவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கத்தக்கதாக வடக்கு கிழக்கில் மட்டும் இராணுவப் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு அபரிமிதமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது ஏன்?
* நிந்தவூர் பரப்புரைக் கூட்டத்தில்
13 ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு அமைய மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அதிகாரத்தை அரசு மிகவும் மோசமாக கபளீகரம் செய்துள்ளது. பாராளுமன்றத்தைக் கலைப்பது போன்று மாகாண சபையை சனாதிபதி கலைக்க முடியாது.
13 ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை அரசு நினைத்தபடி எதனையும் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாதென்ற கோட்பாட்டினை அரசு மீறியுள்ளது.
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக உத்தரவாதம் வழங்கும் இவ்வரசு, கொடுத்த அதிகாரத்தினை மிகவும் மோசமாகப் பறிக்கும் முகமாக செயற்பட்டுள்ளது. முகா யாரிடமும் அடமானம் வைக்கப்படுவதற்கோ சரணாகதி அரசியலை செய்வதற்காகவோ உருவாக்கப்படவில்லை.
ஆனால், முகா மானத்தை அடமானம் வைத்து சரணாகதி அரசியலைத் தேர்ந்தெடுத்து விட்டது. சிங்கள - பவுத்த பேரினவாதத்திடம் அமைச்சர் பதவிகளுக்காகச் சரணாகதி அடைந்து விட்டது.
* பாலமுனை தேர்தல் பரப்புரைக் கூட்டம்
ஒரு பயங்கரவாதத்தை நிறைவு செய்துள்ள அரசு அடிக்கடி தேர்தல் நடத்துகின்ற ஒரு வித்தியாசமான சனநாயக பயங்கரவாதத்தை எம் மத்தியில் அரங்கேற்றி வருகிறது.
ஆக மொத்தத்தில் இராவூவ் ஹக்கீம் சனநாயக பயங்கரவாதத்தை அரங்கேற்றி வரும் அரசிடம் மண்டியிட்டு சரணாகதி அடைந்துவிட்டேன் என்கிறார்!
கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்காக முகா தலைவர், அய்க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கியதற்காக அந்தக் கட்சியின் முத்த உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இதனால் கட்சிக்குள் மீண்டும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் அண்மையில் நடைபெறவிருந்த அரசியல் அதிவுயர் பீடக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இரவூப் ஹக்கீம் மகிந்தா இராசபக்சேயிடம் ஏன் சரண் அடைந்தார்? தனது அமைச்சுப் பதவியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முகா இன் அதிஉயர்பீடத்தின் அனுமதியின்றி சனாதிபதியிடம் சரணாகதி அடைந்தார் என முகா மூத்த உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.
முகா வோடு நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் பேணி வளர்ப்பதில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு அதிக அக்கறை காட்டி வந்ததை நாடும் மக்களும் அறிவார்கள்.
கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. முஸ்லிம்களுக்கும் அது சொந்தம். இனச்சிக்கலுக்கு தீர்வு காணப்படும் போது முஸ்லிம் மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வையே ததேகூ ஏற்றுக் கொள்ளும் என திரு இரா. சம்பந்தர் ஒருமுறைக்குப் பலமுறை கூறிவந்தார். அதில் இப்போதும் மாற்றம் இல்லை. ஆனால் இராவூ ஹக்கீமின் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத சுயநல அரசியல் ததேகூ இன் தலைவருக்குப் பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது தொடர்பாக திரு இரா. சம்பந்தர் பின்வருமாறு கூறியிருக்கிறார்.
கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும், மக்கள் வழங்கிய ஆணையையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உதாசீனம் செய்து சுயநலமாகச் செயற்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின்னரும் முஸ்லிம் மக்கள் பல விடயங்களை வலியுறுத்தி வந்தனர். அந்த மக்களின் ஆணைக்கு மாறாக, விருப்பத்திற்கு மாறாக முஸ்லிம் காங்கிரசின் தலைவர் இரவூப் ஹக்கீமும் கட்சியும் சுயநலமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த விடயத்தில் நாங்கள் ஏமாற்றமடையவில்லை. பல விடயங்களை எதிர்பார்த்துத் தான் நாங்களும் இருந்தோம். ஆனால், முஸ்லிம் காங்கிரஸை நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இரவூப் ஹக்கீமும் அவரது கட்சியின் ஏனைய வேட்பாளர்களும் அரசாங்கத்தை விமர்சித்து, தனித்துப் போட்டியிட்டதால் தான் இவ்வளவு இருக்கைகளையேனும் பெறமுடிந்தது. தனித்துப் போட்டியிட்டதன் காரணமாகவே அதன் மீது கொண்டிருந்த நம்பிக்கை காரணமாகவே தான் முஸ்லிம் மக்கள் ஈடுபாட்டுடன் வாக்களித்தனர் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் மறந்துவிடக் கூடாது. மக்களின் ஆணையைப் புறந்தள்ளி முடிவெடுத்து விட்டு, முஸ்லிம் மக்களின் நலன்கருதியே அவ்வாறு செயற்பட்டதாக இரவூ ஹக்கீம் கூறியிருக்கிறார். இது முஸ்லிம்களின் நலன்கருதிய தீர்மானமல்ல, சுயநலமான தீர்மானமாகவே எங்களுக்குப் படுகிறது.
தங்களுடைய சொந்த தேவைகளுக்காகவும் பதவிகளுக்காகவுமே அவர்கள் இப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். பேரம் பேசும் சக்தி பற்றி முஸ்லிம் காங்கிரஸ் அதிகமாகப் பேசியது.
ஆனால் அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக செயற்பட்டு அவர்களின் நலனுக்காக பாடுபட்ட ததேகூ க்கு 11 இருக்கைகள் கிடைத்தன. எங்களை நம்பி வாக்களித்த தமிழ் மக்களின் நலனுக்காகத் தான் பொறுமையாகக் காத்திருந்தோம். தமிழ், முஸ்லிம் மக்கள் என்ற கூட்டான தமிழ் பேசும் மக்களின் அதிகாரங்களுக்காக, தமிழ்பேசும் மக்களின் பிரதேசங்களில் தமிழ்பேசும் தலைமை இருக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் காங்கிரசுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், அதனைக்கூட தட்டிக்யொதுக்கி, அய்க்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் ஒருவருக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்திருக்கிறார்.
இதுதான் அவரது பேரம் பேசும் திறமையா?
கட்சியை நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்களை ஏமாற்றி, சுயநலத்துக்காகவும் சுய லாபத்திற்காகவும் செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் இதன் விளைவை வெகு விரைவில் அனுபவிப்பார் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். அய்க்கிய தேசியக் கட்சித் தலைவர் இரணில் விக்கிரமசிங்கி இரவூ ஹக்கீமைக் கடுமையான வார்த்தைகளால் கண்டித்துள்ளார்.
அமைச்சர் பதவிகளுக்கும் மேலதிக சலுகைகளுக்கும் பதவி சுகங்களுக்கும் சமயத்தையும் புனித நூலான குரானையும் ஆளும் கட்சிக்கு அடகு வைத்துவிட்டதாகச் (The Sri Lanka Muslim Congress (SLMC), despite its election rhetoric, had disregarded its religion and Holy Book, the Quran, for the sake of ministerial positions, perks and privileges, the UNP said yesterday) சாடியுள்ளார். தீவிரவாதிகளால் மசூதிகள் தாக்கப்பட்ட போது முதலைக் கண்ணீர் வடித்த முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு எதிராக வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் இரணில் விக்கிரமசிங்கி குற்றம் சாட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சர் பதவிகளுக்காக முகா முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்துள்ளது. விழுந்த வாக்குகளில் 200,044 (31.58 விழுக்காடு) வாக்குகளை மட்டும் பெற்ற அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி முகா இன் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துள்ளது.
சிங்களக் குடியேற்றம், மீள்குடியமர்வு, இராணுவ தளங்கள், கடற்படைத் தளங்கள், பவுத்த விகாரைகள், பவுத்த விகாரைகளைச் சுற்றி புனித பூமி இவற்றால் தமிழர்களைப் போலவே முஸ்லிம் மக்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
1981 ஆம் ஆண்டு குடிமதிப்பின் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் சிங்களவரது விழுக்காடு 37.78 ஆக இருந்த போது அவர்களுக்கு 660 ச.மைல் நிலப்பரப்புத்தான் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு 1,340 ச.மைல் (76 விழுக்காடு) ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 41.54 விழுக்காடு முஸ்லிம்களுக்கு வெறுமனே 264 ச.மைல் (14 விழுக்காடு) நிலப்பரப்பும் 20.37 விழுக்காடு தமிழர்களுக்கு எஞ்சிய 172 ச.மைல் (10 விழுக்காடு) நிலப்பரபும் ஒதுக்கப்பட்டுள்ளது. வேறு விதத்தில் சொல்வதென்றால் சிங்களவர்களுக்கு மேலதிகமாக 680 ச.மைல் நிலப்பரப்பும் முஸ்லிம்களுக்கு 464 ச.மைல் குறைவாகவும் தமிழர்களுக்கு 216 ச.மைல் குறைவாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அநீதி பற்றி இரவூ ஹக்கீம் கிஞ்சித்தும் கவலைப்படுவதாக இல்லை. அவரது கவலை வேறு. சிங்களக் குடியேற்றத்தினால் பொத்துவில் பறிபோகிறது, புத்தளம் பறிபோய்விட்டதே என்று கேட்டால் "அய்யா நீங்கள் என்ன சொல்கிறீர்கள். நாங்கள் வியாபாரிகள். அரசோடு ஒட்டித்தான் வாழ வேண்டும்" என்று பதில் வருகிறது!
என்னைப் பொறுத்தளவில் இரவூ ஹக்கீம் பேரினவாதிகளிடம் சரண் அடைந்தது எதிர்பார்த்ததே."முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இரவூ ஹக்கீம் நடந்து கொள்வதைப் பார்த்தால் அவர் ஆளும் கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. அதற்காக அலரி மாளிகைக்கு நாயாய் பேயாய் அலைந்து கொண்டிருக்கிறார். ஆளும் கட்சிக்கு எதிராகவே பெரும்பாலான முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்தார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சியோடு கூட்டுச் சேர்வது முஸ்லிம் மக்களுக்குச் செய்யும் இரண்டகமாகும். மறு பக்கத்தில் இராவ் ஹக்கீம் கேட்பதைக் கொடுத்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை மீண்டும் பிடிப்பதை விட ஆளும் கட்சிக்கும் வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை" என எதிர் கூறல் கூறியிருந்தேன். அது பலித்துவிட்டதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை.
அமைச்சர் பதவிக்குப் பல்லிளிப்பது முகா க்கு மட்டும் உள்ள வியாதியல்ல. அதிலிருந்து பிரிந்து போன அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (அஇமகா) இப்போது நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அமைச்சர் அமீர் அலியை தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து விட்டது. அவருக்கு பிரதி அமைச்சர் பதவி ஒன்றும் வழங்கப்படவுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் அஇமகா 3 இடங்களிலும் அத்தவுல்லாவின் தேசிய காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.
அஇமகா இன் பேரம் பேசுதலுக்குக் கிடைத்த வெகுமதி இது. முகா இன் பலத்த எதிர்ப்பு காரணமாக நஜீப் அப்துல் மஜீத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, அமீர் அலிக்கு கிழக்கு மாகாண சபையில் அமைச்சுப் பதவி கூட ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரவூ ஹக்கீம் தனது அமைச்சர் பதவியைத் தக்க வைக்க அடிமட்ட முஸ்லிம் மக்களை ஏமாற்றிவிட்டார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக