யாழ்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் அனந்தி வீட்டின் மீதும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் பிரதிநிதி மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து ஐக்கிய அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
21ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கொழும்பில் உள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் இன்று (20) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்து தெளிவான, சுயாதீன விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
வன்முறைகள் தவிர்த்து சுதந்திரமான, சமாதானமான, நம்பகமான, ஜனநாயகமான தேர்தலை நடத்தி வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்ய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக