சனி, 21 செப்டம்பர், 2013

மக்களை தடுக்கும் நடவடிக்கையில் படையினர்!

News Serviceயாழில் பல தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. மக்களை வாக்களிக்க வேண்டாமென இராணுவத்தினர் பொதுமக்களை அச்சுறுத்திய சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. இந்நிலையில் தேர்தல் தினமான இன்று வாக்குச்சாவடி நுழைவாயிலில் நின்று மக்களை வாக்களிக்க வேண்டாமென சிவில் உடை தரித்த இராணுவத்தினர் அச்சுறுத்தி வருகின்றனர். இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றதை கண்ட யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மக்களை அச்சுறுத்திய இராணுவ வீரரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக