யாழ்.மண்டைதீவு கிராமத்திற்குட்பட்ட ஜே-07, ஜே-08, ஜே-9 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு இவர்களுக்கான வீடமைப்புத் தொடர்பான அறிவுறுத்தல் இடம்பெற்றது.
சுமார் ஐந்தரை இலட்சம் ரூபா செலவில் மண்டைதீவு மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள இந்திய வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப்பணிகள் நான்காம் கட்ட நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.
தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான முதற்கட்ட நிதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
முதற் கட்டமாக ஒரு இலட்சம் ரூபாவும், இரண்டாம், மூன்றாம் கட்டமாக இரண்டு இலட்சம் ரூபாவும், இறுதியாக 50 ஆயிரம் ரூபாவும் பயனாளிகள் கணக்கில் வைப்பிலிடப்படவுள்ளது.
வங்கி ஊடாக பயனாளிகளுக்கான நிதியுதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும், 6 மாத காலங்களில் இவ்வீட்டுத்திட்டம் பூர்த்தியாகப்பட வேண்டும் எனவும் பயனாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக