செவ்வாய், 30 ஏப்ரல், 2013

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் இரகசிய பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை

News Serviceஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் இரகசிய பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இராஜதந்திர நியதிகளை மீறி அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே.சிசன் மட்டக்களப்பு முஸ்லிம் பிரதிநிதிகள் 25 பேரை கொழும்பிற்கு அழைத்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த இரகசிய பேச்சுவார்த்தை குறித்து வெளிவிவகார அமைச்சிற்கு அறிவிக்கப்படவில்லை. கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த இரகசிய பேச்சுவார்த்தையானது 1961ம் ஆண்டு வியன்னா பிரகடனத்திற்கு முரணானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக