திங்கள், 29 ஏப்ரல், 2013

'கைது செய்வோம்' என்று சுரேஸ் எம்.பி.யை எச்சரித்த பொலிஸார் .

ஆர்ப்பாட்டப் பேரணியாகச் சென்றால் கைது செய்வோம்' என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

காணி சுவீகரிப்புக்கு எதிராக இன்று திங்கட்கிழமை தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போதே பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

இன்று காலை 7.30 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த ஆர்பாட்டத்த்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் திரண்டு வீதிக்கு குறுக்காக வந்து காங்கேசன்துறை வீதியூடாக நடந்து சென்றனர். அங்கு வந்த பொலிஸார் இவ்வாறு நடந்து சென்றால் கைது செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள சுரேஸ் எம்.பி, 'எம்மைக் கைது செய்ய முடியுமானால் கைது செய்யுங்கள்' என்று பதிலளித்தார். தொடர்ந்து வீதியில் மக்கள் ஒன்றுகூடி அரசிற்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக