ஞாயிறு, 25 மார்ச், 2012

திருமதி.ராஜேஸ்வரி சண்முகம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ் நிகழ்ச்சிகளில் கடந்த 35  வருடங்களாக சேவை புரிந்த வானொலி குயில் திருமதி.ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி உலகத் தமிழர் மனதில் நீங்கா சோகத்தை உண்டாக்கி விட்டது.1940 ஆம்
ஆண்டு பங்குனி 16 ஆம் நாள் கொழும்பில் பிறந்த இவர் தனது பத்தாவது வயதில்
இலங்கை வானொலியில் தன்னை இணைத்துக்கொண்டார்.தொடர்ந்து பல மேடை நாடகங்களில் நடித்த இவர் வானொலியில் கடமை ஆற்றிய திரு.சண்முகம் அவர்களை திருமணம் புரிந்து சந்திரமோகன் (காலம் சென்ற) சந்திரகாந்தன் வசந்தி ஆகியோரின் அன்புத் தாயாக வாழ்ந்தார்.1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரபலம் மிக்க அறிவிப்பாளராகத் திகழ்ந்த கே.எஸ்.ராஜா பீ.எச்.அப்துல் ஹமீது ஆகியோரோடு போட்டி போட்டு பெண் அறிவிப்பாளராக தன்னை இனம் காட்டினார்.
பின்நாளில் தமிழ் பிரிவுப் பொறுப்பாளராகவும் பணி புரிந்தார்.இவரது தொகுப்பில் பொங்கும் பூம்புனல் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி இரவின் மடியில் என்பன களை கட்டின.இலக்கிய சுவையோடு அறிவிப்பு செய்யும் பாணி மக்களைக் கவர்ந்தது.ஓய்வு பெற்றாலும் பகுதி நேரமாக வானொலியில் கடமை செய்தார்.இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் இந்திய தொலைக்காட்சி ஒன்றில் பீ.எச்.அப்துல் ஹமீது அவர்களின் நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்து விட்டு இதைப்போல வேறு ஒருவராலும் செய்ய முடியாது என்று புகழ்ந்து தள்ளினாரம்.இந்தக் குயிலைப் பிடித்து கூண்டில் அடைத்து விட்டானே அந்தக் காலன் இனி எப்படிப் பாடும்.துயரமும் துக்கமும் தொண்டையை அடைக்க விடை தந்தோம் தாயே.வா மீண்டும் மண்ணிற்கு நீயே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக