
அதன் போது உரையாற்றிய மேஜர் திரு மஸ்சிமோ வியசேத்தி அவர்கள் நீண்டகாலமாக திரிவேரோ நகரத்தில் மிகவும் ஒழுக்கமாக சமூகமாக வாழும் உங்களிற்கு இனப்பிரச்சனை உண்டு என்பது தெரியும் ஆனால் இவ்வாறான கொடுமை நடந்ததென்பது இன்றுதான் அறிய முடிந்ததை என்ணி கவலையடைகிறேன் என்று கூறி இனியும் இவ்வாறான கொடுமைகள் தொடர்வதை அனுமதிக்க முடியாது. தங்களினுடைய அரசியல் பலம் சிறியது என்றாலும் அதனூடாக செய்யக்கூடிய முயற்சிகளை செய்வதாக கூறினார். அதற்கு அனைத்து கட்சிகளும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டன.
தொடர்ந்து உரையாற்றிய லேகா நோட் கட்சியைச்சேர்ந்த திரு சில்வானோ அவர்கள் திறிவேரோ நகரசபை உரிமைகள் மறுக்கப்பட்ட இனங்களிற்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர்களுடைய தேசியக்கொடிகளை நகரசபை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் (உதாரணம் தீபெத்) அந்த வகையில் தமிழீழத் தேசியக் கொடியையும் நாங்கள் அங்கீகரித்து நகரசபையில் வைத்திருக்க வேண்டும் என்று மேஜரை கேட்ட போது அதனையும் அனைத்துக் கட்சியினரும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டனர்.
20-05-2012 அன்று திறிவேறோவில் நடந்த முள்ளிவாய்கால் நிகழ்வில் கலந்து கொண்ட துணை மேஜர் திரு மாரியோ அவர்களும் லேகா நோட் கட்சியை சேர்ந்த திரு சில்வானோ அவர்களும் எமது தமிழீழ தேசியக் கொடியினை உத்தியோக பூர்வமாக பியமொந்தே மக்களவை பிரதிநிதி அவர்களிடம் பெற்றுக் கொண்ட நிகழ்வானது பல்லாயிரக்கணக்கான எமது மாவீரச்செல்வங்களின் அளப்பரிய தியாகத்தினாலும் சொல்ல முடியாத துன்பங்களை சுமந்து எமது விடுதலைக்காக தங்களை இழந்து பணிசெய்த மக்களுடைய அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெற்றியாகும்.
தமிழர்களின் வீரத்தை மீண்டும் உலகறியச்செய்த எங்கள் தேசியத் தலைவர் எம்மினத்துக்கு கிடைத்த பெருங்கொடையாகும். துமிழ் மக்கள் வாழும் ஒவ்வொரு பிரதேசமும், ஒவ்வொரு நாடும் எமது தேசியக்கொடியை உலகெல்லாம் பறக்கச் செய்வதும் எமது வரலாற்றுக் கடமைகளில் ஒன்றாகும். இந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக கரகோசமிட்டு மகிழ்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக