வெள்ளி, 18 ஜூலை, 2014

புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா திருப்பி அனுப்பாது!

ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரிச் சென்று கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 153 புகலிடக் கோரிக்கையாளர்களையும் திருப்பி அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என அந்நாட்டு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 7 ஆம் திகதி புகலிடத் தஞ்சம் கோரி 153 பேர் படகில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றனர். இவர்களின் நிலை என்னவென்று நீண்ட நாடகளாகத் தெரியாமல் இருந்த நிலையில் அவர்களை கைது செய்து தடுத்து கப்பலில் வைத்திருப்பதாக அந்நாட்டு அரசு நீதிமன்றில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவர்களை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து இருந்தது. ஆனால் அரசின் இந்த நடவடிக்கைக்கு நீதிமன்று இடைக்காலத் தடை விதித்திருந்தது. கப்பலில் தடுத்து வைக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சரியான முறையில் உணவு வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. இவற்றுக்கு எதிராக மெல்போர்ண் உயர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் ஆஸ்திரேலிய அரசு புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பப் போவதில்லை என அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக