செவ்வாய், 1 ஜூலை, 2014

பிரேசிலை ஆதரிக்கும் ஆறு விரல்க்குடும்பம்!(படம்)

பிரேஸில் நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அதிசமாக ஒரு கையில் 6 விரல்கள் காணப்படுகின்றன.
த சில்வா எ குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பமே இவ்வாறு ஒரு கையில் 6 விரல்களுடன் இருக்கின்றனர். த சில்வா குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் பிரேஸிலின் தலைநகரான பிரேஸிலியாவில் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஒரே காலிலும் 6 விரல்கள் காணப்படுகின்றன.
தற்போது பிரேஸில் நடைபெறும் கால்பந்து உலக கிண்ணத்தில் தமது நாடு 6ஆவது முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றி சம்பியனாகும் என தமது ஆதரவினை வெளியிட்டுள்ளனர் த சில்வா குடும்பம்.
'பிரேஸிலின் வெற்றிக்கு நாங்கள் அதிகமான சக்தியை வழங்குகின்றோம். இந்த சக்தி மைதானத்தில் பரவி அணி சிறப்பாக விளையாடி தங்களது 6ஆவது உலக கிண்ணத்தை வெற்றிபெறும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார் அனா கரோலினா சன்டா த சில்வா.
6 விரல்கள் காணப்படுகின்ற போதிலும் அன்றாட நடவடிக்கைகளில் எதுவித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்கிறது த சில்வா குடும்பம். மேலதிக கால் விரல்கள் விளையாட்டிலும் உதவியாக இருக்கும் என்கிறார்கள்.
பொலிடக்டைலி எனும் ஒரு அரிய வகை பரம்பரை கோளாறு காரணமாகவே இந்த 6 விரல்கள் தோன்றுகிறதாம்.
'6 விரல்கள் இயல்பானது என்றே எனது தந்தை கருதினார். எங்களைப் பொறுத்தளவில் 5 விரல்களை உடையவர்கள் அசாதாரணமானவர்கள்' என்கிறார் சில்வா குடும்பத்தின் மூதாட்டி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக