விடுதலைக் கோரி, கடந்த, 19 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை வாலிபரை காண வந்த உறவினர், அதிர்ச்சியில் இறந்தார். இலங்கையில் இருந்து உரிய ஆவணம் இல்லாமல், தமிழகம் வந்தோரை, போலீசார் பல்வேறு முகாம்களில் தங்க வைத்துள்ளனர். அதுபோல் வந்த செந்தூரன், பூந்தமல்லி அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்ட போதிலும், விசாரணையை விரைந்து முடித்து, தன்னை விடுதலை செய்ய வேண்டும் என, கடந்த 6ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். திருவள்ளூர் மாவட்ட ஆர்.டி.ஓ., ரவிக்குமார் பேச்சு நடத்தியும், அவர் போராட்டதை கைவிடவில்லை.
இந்நிலையில், இலங்கையிலிருந்து செந்தூரனின் அத்தை கமலா தேவி, அவரது கணவர் தங்கவேல் மற்றும் கீர்த்தனா ஆகியோர், தமிழகம் வந்தனர். கடந்த, 21ம் தேதி, கமலாதேவிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கமலா தேவியின் இதயத்தில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியான தகவல்களை அவரிடம் கூறக்கூடாது என, எச்சரித்து இருந்தனர்.
ஆனாலும், செந்தூரன் உயிருக்குப் போராடும் தகவல், கமலா தேவிக்கு எட்டியது. சதா அவரை பற்றியே நினைத்து வருந்தியுள்ளார். இதனால், உடல் நிலை மிகவும் மோசமடைந்து இறந்தார். அவரது உடல் , போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக