ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

4ஆவது இடத்தில் இருந்த பிள்ளையான் 1ஆவதாக உயர்த்தப்பட்டார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 110000 வரையிலான வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. நேற்று அதிகாலை அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களில் அதிகாரிகளிடம் இருந்து குனோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே அதிக வாக்குகளும் அதன் அடிப்படையில் 7 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுக்கு 4 ஆது இடமே கிடைக்கப்பெற்றது. பொதுஜனஐக்கிய முன்னணியில் முதலாவது கூடிய வாக்கு அமீர் அலிக்கே கிடைக்கப்பெற்றது.
எனினும் இது குறித்து பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தயாரான நிலையில் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் அவசரமாக உரையாடி உள்ளார். கூட்டமைப்பிற்கு 7 ஆசனங்கள் கிடைக்கப்பெற்று உள்ளதாகவும் அதனால் 2 போனஸ் ஆசனங்களும் கூட்டமைப்பிற்கே கிடைக்கும் எனவும் கூறப்பட்டதனை அருகில் இருந்தவர்கள் தெளிவாக கேட்டுள்ளதனை குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு உறுதிப்படுத்தி உள்ளனர்.
இதனை அடுத்து ஜனாதிபதி சம்பந்தப்பட்ட மட்டக்களப்பு தேர்தல் அதிகாரிகள் மாவட்ட தெரிவு அத்தியட்சகர் ஆகியோருடன் பேசியதன் பின்பு கூட்டமைப்பிற்கு 7 ஆசனங்கள் கிடைக்கப்பெறாத வகையில் வாக்கு எண்ணிக்கைகள் மாற்றி (விருப்பு வாக்குகளை) அமைக்கப்பட்டுள்ளன. அதனாலேயே நேரத்துடன் வாக்கு எண்ணும் பணிகள் முடிவுற்ற பொதும் கிழக்கு மாகாண இறுதி முடிவுகள் நீண்ட நேரத்தின் பின்பே வெளியிடப்பட்டன.
முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் தான் தோற்றுச் செல்வதாக பின்தங்கிய நிலையில் இருப்பதாக இரவு தேர்தல் வாக்கு எண்ணும் பகுதிகளுக்கே செல்ல வில்லை. எனினும் கூட்டமைப்பின் வாக்குகள் பிள்ளையானுக்கான விருப்பு வாக்குகளாக மாற்றப்பட்டு அமீர் அலியைவிட அதிகமான வாக்குகள் கிடைக்கப்பெற்றதாக கூறி 4 ஆவது இடத்தில் இருந்த பிள்ளையானுக்கு முதலாவது இடம் வழங்கப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அமீர் அலி அதிர்ப்த்தி அடைந்து குழப்பமடைய அவருக்கு அரசாங்க உயர் மட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற அவசர தொலைபேசியின் பின் அவர் தனது எதிர்ப்பை கைவிட்டு மொனமானார்.
இதேவேளை வழமையாக கடந்தகாலத் தேர்தல்களின் போது தேர்தல் முடிவை அறிவிப்பதற்கு ஒரே கட்டுப்பாட்டு நிலையமே தொழிற்படம்டு வந்தன. ஆனால் இம்முறை வழமைக்கு மாறாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இரண்டு கட்டுப்பாட்டு நிலையங்கள் செயற்பட்டுள்ளன. அத்துடன் வழமையாக தமிழ் மாவட்டங்களில் வாக்கு எண்ணும் பணிகள் தமிழ் உத்தியோகத்தர்களே அதிகமாக கடமையில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டு வந்துள்ளனர். ஆனால் இம்முறை தெற்கைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் பெரும்பான்மையின உத்தியோகத்தர்களுமே 99 வீத வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டமையும் பலத்த சந்தேகத்தை தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளிடையே ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கின் தேர்தல் சூடுபிடித்து பிரச்சாரங்கள் தீவிரமான கடந்த சில வாரங்களுக்கு முன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ கிழக்கிற்கு விஜயம் செய்த போதே குளோபல் தமிழ்ச் செய்திகள் சந்தேகம் வெளியிட்டு இருந்தது.அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 4000 வரையிலான வாக்குகள் பிள்ளையானின் விருப்புவாக்குகளாக மாற்றப்பட்டு மட்டக்களப்பில் கிடைக்க வேண்டிய 7 ஆசனங்களை 6 ஆக குறைத்ததன் மூலம் கூட்டமைப்பிற்கு கிடைக்க வேண்டிய 2 போனஸ் ஆசனங்களையும் இல்லாமல் செய்து மகிந்த ராஜபக்ஸ சகோதரர்கள் வழமைபோலவே தம்மை வெற்றியாளர்களாக அறிவித்தது மட்டும் அன்றி ஒரு பொம்மை முதலமைச்சரையும் மீண்டும் பதவியில் அமர்த்த ஒரு முஸ்லீம் உறுப்பினருக்கு கிடைத்த அதிகப்படியான வாக்குகளுக்கு ஆப்பு வைத்து தமது நாடகத்தை அரங்கேற்றி உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் குறிப்பிட்டுள்ள தகவல்கள் பிழையானவை அரசாங்கம் தேர்தல் தில்லுமுல்லு எதனையும் செய்யவில்லை என்றால், அதனை நிரூபிக்க விரும்பினால் சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்கள் முன் மட்டக்களப்பு மாவட்ட வாக்குகளை மீள எண்ணத் தயாரா? என குளோபல் தமிழ்ச் செய்திகள் சவால் விடுகிற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக