"ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒத்துழைப்பு வழங்கினால் அது வாக்களித்த மக்களுக்குத் துரோகமிழைப்பதாக முடியும். ஆனால், முஸ்லிம் மக்களின் உணர்வுகளை நாம் பெரிதும் மதிக்கின்றோம்.
. முஸ்லிம் மக்கள் தமக்கு வழங்கிய ஆணையைக் கருத்திற்கொண்டு ஸ்ரீ லங்கா மு அதற்காக கிழக்கில் முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கவும் தயாராக உள்ளோம்ஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
முதலமைச்சர் பதவிக்காக தமிழ் பேசும் மக்களுக்குக் கிடைத்துள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிடுவதற்கு நாம் தயாராக இல்லை. எது எப்படியிருந்த போதிலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் தர்மம் வெல்லும் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன்.'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றுத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நாம் அரைமணி நேரம், 5 நிமி டங்களில் தீர்மானங்களை மேற்கொள்வோம். அதையே மற்றவர்களிடமும் எதிர்ப்பார்க்கமுடியாது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நன்றாகக் கலந்தாலோசித்து ஒரு தீர்மானத்தை எடுக்கட்டும். அதற்காக நாம் காத்திருக்கிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஜானகி ஹோட்டலில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு தமது முழுமையான ஆதரவை யாருக்கு வழங்குவோம் என்பது குறித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கலந்துரையாடலின் பின்னர் தாம் எடுக்கும் முடிவினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பகிரங்கமாக அறிவிக்கும் வரை அது குறித்து எம்மால் ஒன்றும் கூறமுடியாது. இருப்பினும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது ழுமுமையான ஆதரவை எமக்கு வழங்கும் என நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
எமது இந்த எதிர்பார்ப்புக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது தேர்தலில் தனியாகப்போட்டியிடுவதற்குத் தாம் தீர்மானித்த பின்னர் அமைச்சர் ஹக்கீம் உள்ளிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் அரசை விமர்சித்துதான் தமது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தனர். இதன் அடிப்படையில் தான் கிழக்கு வாழ் முஸ்லிம் மக்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு தமது ஆதரவை வழங்கினர்.
இரண்டாவது நாமும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகவே முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அளித்து அங்கு ஏழு ஆசனங்கள் பெறுவதற்கு வழிவகுத்தனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்முடன் இணைந்து ஆட்சியமைக்கவேண்டும் என்பதே முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பு. முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைய வேண்டும் எனக்கூறி எந்தவொரு தனிநபரும். எந்தவொரு குழுவும், எந்த கருத்துகளையும் இதுவரையில் தெரிவிக்கவில்லை.
கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் மட்டுல்லாது முஸ்லிம், சிங்கள மக்களும் எமக்கு வாக்களித்தனர். இவர்களின் உணர்வுகளை நாம் மதிக்கின்றோம். விசேடமாக முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு நாம் பெரிதும் மதிப்பளிக்கிறோம்.
இதனடிப்படையில் தான் கிழக்கில் முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கவும் நாம் தயாராக உள்ளோம். இதனூடாக கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் நிம்மதியாகவும், சமாதானத்துடனும் வாழக்கூடியதொரு சூழல் ஏற்படும் எனவும் நாம் எதிர்ப்பார்க்கின்றோம்.
பதவியை அடிப்படையாகக் கொண்டு நாம் அரசியல் நடத்தவில்லை. கிழக்கு மாகாண ஆட்சி முதலமைச்சர் பதவியில் மட்டும் தங்கியிருக்கவில்லை. அதற்கு அப்பால் பலவிடயங்கள் இருக்கின்றன.
பதவியை விட எமது மக்களின் உணர்வுகள் எமக்கு முக்கியம். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் உணர்வுகளே எமக்கு முக்கியம். அதனை அடிப்படையாகக் கொண்டே நாம் எமது தீர்மானங்களையும் எடுப்போம்.
நாம் அரை மணி நேரத்தில் 5 நிமிடங்களில் முடிவுகளை எடுப்போம், அதுபோல் மற்றவர்களும் முடிவெடுக்க வேண்டும் என நாம் கூறமுடியாது தேர்தல் முடிவடைந்த பின்னர் ஒரு வாரம், ஒரு மாதத்திற்கு முடிவுகள் எடுக்கவேண்டும் என்று நாட்டின் அரச சாசனத்தில் கூறப்படவில்லை. எனவே முஸ்லிம் காங்கிரஸ் இது விடயத்தில் ஆழமாகச் சிந்தித்துத் முடிவெடுக்கலாம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மக்கள் தமக்கு வழங்கிய ஆணையையும், மக்களின் உணர்வுகளையும் கருத்தில்கொண்டே எமக்குச் சாதகமான தீர்மானமொன்றை எடுக்கும் என நாம் எதிர்ப்பார்க்கின்றோம். அதன் முடிவுக்காக நாம் காத்திருக்கிறோம்.
கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் என முஸ்லிம் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற நாம் தயாராக உள்ளோம். அத்துடன் முதலமைச்சர் பதவி தமக்கு வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் எமக்கு வேண்டுகோள் விடுத்தாலும் அந்தப்பதவியை அதற்குக் கொடுக்கவும் நாம் தயாராக உள்ளோம்.
சுழற்சி முறையிலான மாகாணசபை ஆட்சிகுறித்து இரு தரப்பும் கலந்தலோசித்து முடிவெடுக்கலாம். நாம் அரசுடன் இணைந்து செயற்படமாட்டோம் என முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்தல் பிரசாரங்களில் தமது கருத்தை தெரியப்படுத்தியிருந்தனர்.
இவர்களின் இந்தக் கருத்தும் முஸ்லிம் காங்கிரஸ் எமக்கு ஆதரவு வழங்கும் என்ற எதிர்ப்பார்ப்புக்கு காரணமாக அமைந்தது. முஸ்லிம் காங்கிரஸின் முடிவு என்ன என்பது எமக்கு இதுவரையில் தெரியாது நாம் அதை அண்மையில் சந்தித்துப் பேச்சு எதுவும் நடக்கவில்லை. ஆனால் நேற்று முன்தினம் எம் இரு தரப்புக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவிருந்தது.
அமைச்சர் ஹக்கீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று முன்தினம் அலரி மாளிகையில் சந்தித்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாகவே எமது இந்த சந்திப்பு வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அரசும் என்ன பேசுகின்றனர் என்பது பற்றி எமக்குத் தெரியாது. அதைப்பற்றி நாம் அதனிடம் கேட்கவும் இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக