புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கே.பி அவர்களால் 2009 ஜுன் - ஜுலை காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகத்திற்கும், நாடுகடந்த அரசுக்கும் இடையே மோதல்கள் வெடித்திருப்பதாக தகவல்கள் வெளியுள்ளன.
கடந்த ஆண்டு கனடா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற தேசங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகளைப் பிளவுபடுத்தியும், புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களின் எழுச்சியை சிதைத்தும் கடந்த ஆண்டு பெரும் குழப்பங்களை கே.பியின் தலைமைச் செயலகம் - நாடுகடந்த அரசு ஆகியவை விளைவித்து வந்தன.
இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் நிதிக் கையாளுகை தொடர்பாக இவ்வாண்டு ஏற்பட்ட முரண்பாடுகள் முற்றி தற்பொழுது இருகூறாக கே.பி குழு பிளவடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தேசிய செயற்பாட்டாளர்களால் நடாத்தப்பட்டு வந்த மாவீரர் நாள் நிகழ்வுகளைக் கடந்த ஆண்டு பிளவுபடுத்திய இக்கும்பல் இப்பொழுது இரு குழுக்களாகப் பிளவடைந்திருப்பது கே.பியையும், அவரை இயக்கும் மகிந்த சகோதரர்களையும் சங்கடத்திற்கு ஆளாக்கியிருப்பதாக நம்பகமான வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதன் விளைவாக புலம்பெயர் தேசங்களில் தேசிய செயற்பாட்டாளர்களின் கை ஓங்குவதோடு, இவ்வாண்டு மீண்டும் தேசிய செயற்பாட்டாளர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் ஒற்றுமையுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது இவ்விதமிருக்க மோதல்களில் ஈடுபட்டுள்ள தமது இரு குழுக்களிடையேயும் சமரசம் செய்யும் நிமித்தம் தனது தூதுவராக தமிழ் மருத்துவர் ஒருவரை அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கே.பி அனுப்பி வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டியங்கி வரும் தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றின் பணிப்பாளரின் சகோதரரான இந்நபர், 2009ஆம் ஆண்டு ஜுன்-ஜுலை காலப்பகுதியில் உருத்திரகுமாரன் தலைமையில் நாடுகடந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டதில் முக்கிய பங்கை வகித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக