செவ்வாய், 25 செப்டம்பர், 2012

சூசையின் மனைவியுடன் படகில் சென்ற மகனைக் கண்டுபிடித்து தாருங்கள்!- மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாயார் முறைப்பாடு


சூசையின் மனைவியுடன் படகில் சென்ற மகனைக் கண்டுபிடித்து தாருங்கள்!- மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாயார் முறைப்பாடு
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளபதி சூசையின் மனைவியுடன் படகில் சென்றபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தனது மகன் தொடர்பான விபரங்களைப் பெற்றுத்தருமாறு தாயொருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முல்லைத்தீவு 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த கந்தசாமி பாலன் வயது 41 என்றவரே இவ்வாறு படகில் சென்றபோது காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.
2009ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளபதி சூசையின் மனைவியுடன் படகில் சென்றபோது, இவரும் அவர்களது படகில் தப்பிச் செல்வதாகச் சென்றதாகவும் பின்னர், கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டபோது தனது மகன் காணாமல் போயுள்ளதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே மனித உரிமைகள் ஆணைக்குழுவினர், சூசையின் மனைவியுடன் சென்று காணாமல்போன தனது மகனைக் கண்டு பிடித்து தருமாறும் தாயார் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக