செவ்வாய், 11 செப்டம்பர், 2012

முஸ்லிம் முதலமைச்சருக்கு எதிர்ப்பில்லை என்கிறார் பிள்ளையான்!


கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் ஆட்சியமைப்பதற்காக ஶ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதில்லை தமக்கு எவ்வித எதிர்ப்பு இல்லை என முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் குறித்த பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரே முதலமைச்சராக வரவேண்டுமே தவிர, அவர் முஸ்லிமா அல்லது தமிழரா என்ற பிரச்சனை இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.ஆனால் கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரமுடியாமல்போனால் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறுகின்றார்.
ஆனால் ஆளுங்கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட எதிரணியினருக்கே கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளதாக கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தாம் எதிரணிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.
அரசாங்கத்திற்கு கிழக்கில் ஆட்சியமைப்பதற்கான போதிய வல்லமை இல்லை என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டினா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக