புதன், 26 செப்டம்பர், 2012

இலங்கை தொடர்பில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹிலரிக்குக் கடிதம்

இலங்கை தொடர்பில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹிலரிக்குக் கடிதம்

இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்நாட்டு ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
அமெரிக்க பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 31 பேர் இவ்வாறு இலங்கை தொடர்பில் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கைப் பரிந்துரை என்பனவற்றை அமுல்படுத்துவது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் மனிதாபிமான மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள்; தொடர்பில் காத்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் குற்றச் செயல் விசாரணை தொடர்பில் இலங்கை அரசாங்கம் காலம் தாழ்த்தக் கூடும் என்ற அச்சம் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன், பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள், ஹிலரி கிளின்ரனிடம் கோரியுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக