ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

இந்திய விஜயத்தில் ஜெயலலிதா, கருணாநிதியையும் சந்திக்க கூட்டமைப்பு திட்டம்!

இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடில்லிக்குச் செல்லவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி ஆகியோரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளது.
இச்செய்தியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயத்தின் போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பான விவகாரம் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கும்.

சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் அசோக் காந்தாவை நாங்கள் நாளை மறுதினம் சந்திக்கவுள்ளோம். அதன் பின்னர் எதிர்வரும் 10ஆத் திகதி புதுடில்லிக்கு விஜயம் செய்கின்றோம்.

புதுடில்லியில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் சென்று முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளோம்.

இவ்விஜயத்தின் போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதில் ஏற்பட்டிருக்கும் முடக்க நிலை, வடக்குக் கிழக்கின் தற்போதைய நிலைமைகள் மற்றும் காணிப் பிரச்சனைகள் குறித்து விளக்குவோம் என மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளா
                       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக