வெள்ளி, 28 செப்டம்பர், 2012

மீளக்குடியேறிய மக்கள் குழப்பம் அடைய வேண்டியதில்லை - கருணா

கேப்பா பிலவு - மந்துவில் பகுதிகளில் மீளக்குடியேறிய மக்கள் குழப்பம் அடைய வேண்டியதில்லை - கருணா
முல்லைத்தீவு கேப்பா பிலவு, மந்துவில் பகுதிகளில் மீளக்குடியேறிய மக்கள் எவ்வித குழப்ப மும் அடைய வேண்டியதில்லையென மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி அந்த மக்களை அரசு குடியமர்த்திவிட்டதாக சில விஷமிகள் பொய்ப்பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இப்பகுதிக்கு விஜயம் செய்து அந்த மக்களை குழப்ப முயற்சிக்கிறார்கள். எனவே மக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை.
இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் எவ்வாறு சகல வசதிகளுடனும் அரசு மீளக்குடியமர்த்தியதோ அதேபோன்று இவர்களுக்கும் உரிய சகல கொடுப்பனவுகள், வசதிகளுடன் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தற்காலிக வீடுகளுடன் உலர் உணவு என்பன வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்குரிய நிரந்தர வீடுகள் விரைவில் வழங்கப்படும். இந்திய வீடமைப்புத் திட்டம், கட்டம் கட்டமாக பூர்த்தியாகும் பட்சத்தில் அவர்களுக்கு வீடுகளும் வழங்கப்படும்.
தமிழ் மக்கள் மத்தியில் சென்று வீணான தகவல்களை தெரிவிப்பதன் மூலம் அந்த மக்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள். எனவே மக்கள் இது குறித்து விளிப்பாக இருக்க வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் அன்றாட தேவைகள் குறித்து அரச அதிபர் தலைமையிலான குழு எந்நேரமும் ஆராய்ந்து வருகிறது.
மெனிக் பாம் முகாமிலிருந்து இறுதியாக 361 குடும்பங்களைச் சேர்ந்த 1160 பேர் முல்லைத்தீவு கேப்பாபிலவு மற்றும் மந்துவில் பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களது நலன் மற்றும் தேவைகள் குறித்து ஆராய தான் விஜயம் செய்யவுள்ளதாக பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக