தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஆட்சியமைப்பதை தடுப்பதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, தமது ஆசனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், இது தொடர்பில் மக்கள் முன்னால் வெகுவிரைவில் அம்பலப்படுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏழு ஆசனங்களைப் பெறக்கூடிய வாய்ப்பிருந்தது. அத்துடன் போனஸ் ஆசனங்களையும் பெறக்கூடிய வாய்ப்பிருந்தது. ஆனால் இவை இறுதி நேரத்தில் திட்டமிட்ட வகையில் தடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருந்தாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பை கிழக்கு மக்கள் அமோக வெற்றியீட்டச் செய்துள்ளனர். கிழக்கில் தமிழ் மக்களின் பலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதை மக்கள் மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளனர்.
முள்ளியவாய்க்காலின் பின்னர் 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற தேர்தலில் அதிகளவில் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர். இதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அவர்களின் அபிலாசைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கிழக்கு தமிழ் மக்கள் கோரியுள்ளனர்.
இராஜதந்திர ரீதியிலான விடுதலைப் போராட்டத்துக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தங்களது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆட்சியமைக்க செய்யவிடாமல் திட்டமிட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிக ஆசனங்கள் வருவதும் தடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சந்தப்பம் வரும்போது மக்களுக்கு தெரிவிப்போம்.
கிழக்கு மாகாணசபை தேர்தல் தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த தீர்வுத்திட்டத்தை வழங்க வேண்டும் என்ற செய்தியை இந்த அரசுக்கு வழங்கியுள்ளது.
அத்துடன் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாக்களிப்பு நிலையம் சென்று வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றியை தெரிவிப்பதுடன் ஆதரவாளர்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக