ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

கிழக்கு மாகாண ஆட்சியை கைப்பற்றுவது யார் - பேச்சுவார்தைகள் நடைபெறுகின்றன:

நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக்கு கட்சி 11 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14 ஆசனங்கனை கைப்பற்றியுள்ளது.
இதனை தவிர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகளின் படி 14 ஆசனங்களை கைப்பற்றியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு திருகோணமலை மாவட்டத்தில் தனித்து போட்டியிட்ட தேசிய சுதந்திர முன்னணி பெற்ற ஒரு ஆசனத்துடன் 15 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில் ஐக்கிய தேசியக்கட்சி 4 ஆசனங்களை பெற்றுள்ளது. அந்த கட்சி இலங்கை தமிழரசு கட்சிக்கு ஆதரவளிக்கும் நிலையில், அதன் தமிழரசு கட்சிக்கு 15 ஆசனங்களுடன் கிழக்கு மாகாணத்தை கைப்பற்ற முடியும்.
ஆனால் 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளித்தால் 22 ஆசனங்களுடன் முன்னணி கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க முடியும். இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கும் அதனை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்கும்.
முஸ்லிம் காங்கிரசின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து செயற்படுவதில்லை எனவும் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்கப்படும் என தீர்மானித்தால் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவுடன் 22 மேலதிக ஆசனங்களுடன் தமிழரசுக் கட்சியும், முஸலிம் காங்கிரசும் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சியை கைப்பற்ற முடியும்.
தேர்தல் முடிவுக்ள வெளியாகியுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் ஆட்சி அமைப்பு தொடர்பாக ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தீர்மானத்திலேயே கிழக்கு மாகாண சபையை யார் கைப்பற்றுவது என்பது தீர்மானிக்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக