திங்கள், 17 செப்டம்பர், 2012

மகிந்தவுக்கு மீண்டும் ஆபத்து! மேன்முறையீடு செய்யலாம் ரமேஷின் மனைவிக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

மகிந்தவுக்கு மீண்டும் ஆபத்து! மேன்முறையீடு செய்யலாம் ரமேஷின் மனைவிக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி நயோமி ரைஸ் பக்வாட், அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் ஒரு நாட்டின் அரச அதிபருக்கு இருக்கும் சிறப்பு பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவி தொடுத்த வழக்கை நிராகரித்துள்ளார்.
அமெரிக்கா பொன்ற மேற்குலக நாடுகளில், பிறநாட்டுத் தலைவர்களைப் பாதுகாக்கும் சிறப்புச் சட்டம் இருக்கிறது.
இதன் அடிப்படையில், அமெரிக்காவுக்கு விஜயம்செய்யும் பிறிதொரு நாட்டின் தலைவரை, அமெரிக்காவில் வைத்து கைதுசெய்யமுடியாது. இது அமெரிக்க ராஜங்கத் திணைக்களத்தால் வரையப்பட்ட சட்டமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, மகிந்தர் மீது வழக்கு தொடரமுடியாது என்றும்அவரைக் கைதுசெய்ய முடியாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மேன்முறையீடு செய்ய விரும்பும் பட்சத்தில், கேணல் ரமேஷின் மனைவி அதனைச் செய்யலாம் எனவும் நீதிபதி நயோமி ரைஸ் பக்வாட் தெரிவித்துள்ளார். நடைபெற்ற சிறப்பு வாதத்தின்போது, மகிந்த ராஜபக்ஷவின் இராணுவத்தினர் இழைத்த கொடுமைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
அங்கே சமூகமளித்திருந்த பல வேற்றின அறிஞர்களும், அரசியல்வாதிகளும் மற்றும் வழக்கறிஞர்களும் இதனை நன்கு உற்றுநோக்கினார்கள். 3 பேர் அடங்கிய பெஞ்ச் நீதிமன்றத்துக்கு இவ்வழக்கை மாற்றுவது தொடர்பாக தமிழர் தரப்பினர் ஆராய்ந்து வருவதாக மேலும் அறிகிற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக