கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில்இதுவரை தீர்மானிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 11 ஆசங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தை பெற்றது. இந்நிலையில் ஏழு ஆசனங்களை கைப்பற்றி மூன்றாவது இடத்தினை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸுடன் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சியை ஏற்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது.
எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸ் கிழக்கு மாகாண ஆட்சியை ஏற்படுத்த ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கியது.
இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பலமான எதிர்க்கட்சியை கிழக்கு மாகாண சபையில் ஏற்படுத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிட்டார்.
"எனினும் யாரை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் கூடி தீர்மானமொன்றை எடுக்கவுள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற முன்னாள் மாகாண கல்வி பணிப்பாளர் தண்டாயுதபானி ஆகிய இருவரில் ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக