ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பதென கட்சித் தலைமை எடுத்தத் தீர்மானம் இந்த சர்ச்சைகளுக்கான பிரதான ஏதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ள எடுத்தத் தீர்மானத்திற்கு பலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பது என்ற கட்சித் தலைமையின் தீர்மானம் எதேச்சாதிகார போக்கில் எடுக்கப்பட்டதாகவும், வெளிப்படைத்தன்மையுடன் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், அதி உயர் பீடத்தின் பூரண சம்மதம் இந்தத் தீர்மானத்திற்கு கிடைக்கவில்லை எனவும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோரிக்கைகள் எதனையும் வென்றெடுக்காது கட்சித் தலைமை ஆளும் கட்சியில் இணைந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது குறித்து முஸ்லீம் காங்கிரசோ அல்லது கட்சியின் தலைமையோ உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக