சனி, 29 செப்டம்பர், 2012

அன்று அழிவுக்கு கொடுத்தீர்கள்! இன்று ஆக்கத்திற்கு தாருங்கள்! புலம்பெயர் தமிழர்களிடம் உதவி கோரும் டக்ளஸ்


புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்கள் இங்குள்ள மக்களுக்கு மாதாந்தம் 10 டொலர் வழங்கினால் மாதாந்தம் 1893 வீடுகள் கட்டலாம் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ் மாவட்டச் செயலத்தில் நடைபெற்ற இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்தார்.
புலம்பெயர் நாடுகளில் 80,000 ஆயிரம் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மாதந்தம் 10 டொலரை இங்கு அனுப்பினால் இங்குள்ள மக்களிற்கு மாதந்தம் 1893 வீடுகள் கட்டிக்கொடுக்க முடியும்.
கடந்த காலத்தில் புலம்பெயர்ந்த மக்கள் தமது பணத்தினை அழிவுக்காக வழங்கினர். இனி அந்தப் பணத்தினை ஆக்கத்திற்காக பயன்படுத்த முன்வர வேண்டும் என்றார்.
அவ்வாறு முன்வருகின்ற போது ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தூதரகங்கள் ஊடாக அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக