ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

சிங்களபேரினவாத கைக்கூலி நீதிபதி கணேசராசாவுக்கு பதவி உயர்வு !

ஸ்ரீலங்கா பேரினவாத அரசினதும் சிங்கள படைகளினதும் கைக்கூலியாக யாழ் மாவட்டத்தின் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய மாணிக்கவாசகர் கணேசராஜா தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு வழிவகுக்கும் தீர்ப்புக்களை வழங்கியதற்காக பதவி உயர்வை அரசாங்கம் வழங்கியுள்ளது. இவர் கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மக்களின் நியாயபூர்வமான ஜயநாயக ரீதியான போராட்டங்களை அடக்கும் வகையில் அவற்றிற்கு தடைவிதிக்கும் உத்தரவுகளை வழங்கி சிறிலங்கா பேரினவாத அரசுக்கு விசுவாசம் காட்டியதற்காக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தற்போது கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய பி.சிவகுமார் யாழ். நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்றுள்ளார். இவர் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

அத்துடன், தற்போது கல்முனை நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய வஹாப்தீன் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக