ஞாயிறு, 28 அக்டோபர், 2012

கே.பிக்கு எதிரான குற்றச்சாட்டை இந்தியாவினால் மாத்திரமே விலக்கிக்கொள்ள முடியும்!- இலங்கை பொலிஸ்

கே.பிக்கு எதிரான குற்றச்சாட்டை இந்தியாவினால் மாத்திரமே விலக்கிக்கொள்ள முடியும்!- இலங்கை பொலிஸ்கே.பி என்ற குமரன் பத்மநாதனுக்கு எதிராக சர்வதேச பொலிஸ்துறையான இன்டர்போலில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டை இந்தியாவினால் மாத்திரமே விலக்கிக்கொள்ள முடியும் என்று இலங்கை பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.பொலிஸ் பேச்சாளர் பிரிசாந்த ஜெயக்கொடி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
கே.பிக்கு எதிராக இலங்கையில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை.
இந்தநிலையில் அவருக்கு எதிராக இந்தியாவினால் இன்டர்போலிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருக்குமானால் அல்லது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்குமானால் அதனை இந்தியாவே விலக்கிக்கொள்ள முடியும்.
அதனை விலக்கிக்கொள்ளுமாறு இலங்கை இன்டர்போலிடம் கோரமுடியாது என்று பிரிசாந்த குறிப்பிட்டார்.
கே.பிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில் அவரை விடுவித்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தநிலையிலேயே இலங்கையின் பொலிஸ் தரப்பு தமது கருத்தை வெளியிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக