திங்கள், 29 அக்டோபர், 2012

பிரதம நீதியரசர் நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்வார்: எஸ்.பி. திஸாநாயக


பிரதம நீதியரசர் நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்வார்: எஸ்.பி. திஸாநாயக
பிரதமர் நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்வார் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிரானி பண்டாரநாயக்க, சாதாரண சட்டத்தரணிகள், சட்ட வல்லுனர்களை விடவும் சட்டம் பற்றிய ஞானமுடையவர். அரசாங்கம், நாடாளுமன்றம், நிறைவேற்று அதிகாரம், நீதிமன்றம் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று மோதச் செய்ய சதித் திட்டம் தீட்டப்படுகின்றது.

இந்த நிலைமைகளை புரிந்து கொண்டு சிரானி பண்டாரநாயக்க கடமையாற்றுவார். உண்மை நிலைமைகளை மூடி மறைத்து நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.

எவ்வாறான சூழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டாலும் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பது சுலபமானதல்ல என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக