பிரதேச சபை தலைவர் மீதான தாக்குதலை கண்டித்து இன்று யாழ்.குடாநாட்டிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களது பிரதிநிதிகள் எதிர்ப்புப்போராட்டங்களில் ஈடுபட்டனர்.கூட்டமைப்பின் நிர்வாகத்திற்குட்பட்ட உள்ளுராட்சி மன்றங்களது பிரதிநிதிகளே இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
முன்னதாக தமது சபைகளை ஒன்று கூட்டிய அவர்கள் கண்டன தீர்மானங்களை நிறைவேற்றிய பின்னர் அலுவலகம் முன்பதாக ஆர்ப்பாட்டங்களில் குதித்தனர். நல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கலந்து கொண்டிரந்தார்.அதே வேளை தாக்குதலிற்குள்ளான நல்லார் பிரதேச சபை தலைவர் வசந்த குமார் இன்று கடைமைக்கு சமூகமளித்திருந்தார்.
யாழ்.மாவட்டத்தினிலுள்ள 13 உள்ளுராட்சி மன்றங்கள் கூட்டமைப்பு வசமுள்ளது.ஏனைய பிரதேச சபைகளான நெடுந்தீவு வேலணை மற்றும் ஊர்காவற்றுறை என்பவை ஈபிடிபி வசமுள்ளன. எனினும் அவை இன்றைய போராட்டத்தில் பங்குற்றியிருக்கவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக