வெலிக்கடை கைதிகளுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெறுவதாகவும் இதனால் பலர் பலியாகியுள்ளதாகவும் 13பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.காயமடைந்தவர்களில் சிறைக்காவலர் ஒருவரும் கைதிகள் இருவரும் விசேட அதிரடிப்படையினர் 10பேரும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிக்கடை சிறைச்சாலையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையுடன், அவ்வளாகத்தில் உள்ள ஆயுத களஞ்சியசாலையை உடைத்த கைதிகள், அங்கிருந்து துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக