நாடாளுமன்றமேநிதிவிவகாரங்களுக்கு பொறுப்பு கூறவேண்டும் எனினும் 2013ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவருக்கு 66 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.
எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு’ ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
“நிதி விவகாரங்களுக்கு நாடாளுமன்றமே பொறுப்பு கூறவேண்டும் எம்.பி அல்லாத ஒருவருக்கு நாடாளுமன்றத்திற்கு பொறுப்பு கூறமுடியாது. 2013 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்டத்தில் நிதி,பாதுகாப்பு,துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய மூன்று அமைச்சுகளுக்கே 66 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த அமைச்சுகள் ஜனாதிபதியின் கீழ் இருக்கின்றது ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல அவரினால் நாடாளுமன்றத்திற்கு பொறுப்பு கூறவோ முடியாது ஏனெனில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. அவரின் கீழுள்ள அமைச்சுக்கே மொத்த செலவில் 66 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது நாடாளுமன்றத்தின் பலத்தை குறைப்பதற்கான நடவடிக்கையாகும் சட்டவாக்கத்துறையையும் நிறைவேற்று அதிகாரத்திற்குள் கொண்டுவந்து நீதித்துறையையும் கையிலெடுக்கும் ஏகாதிபத்திய முறைக்டிகேடாகும்” என்றார.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக