புதன், 21 நவம்பர், 2012

மகிந்தவின் ஆட்சியை வீழ்த்தப் போகும் பெண்” – கொழும்பு ஆங்கில ஆய்வாளர்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பலமுனைகளில் சக்திவாய்ந்த பெண்கள் பலரின் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும், இதனால் அவர் கடினமானதொரு நேரத்தை எதிர்கொள்ளவுள்ளதாகவும், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றின் அரசியல் ஆய்வாளரான உபுல் ஜோசப் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக ஒபாமா மீண்டும் தெரிவாகியுள்ளது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், சிறிலங்காவுக்கு இது ஏமாற்றமளிக்கும் முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தேர்தலில் ஒபாமா தோல்வியடைவார் என்றும், அவரது நிர்வாகத்தில் சிறிலங்கா தொடர்பான அமெரிக்க கொள்கையை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தவரான, ஒபாமாவின் சிறப்பு உதவியாளரும், தேசிய பாதுகாப்பு சபையின் பல்தேசிய விவகாரங்களுக்கான மூத்த பணிப்பாளருமான சமந்தா பவர் அடுத்த நிர்வாகத்தில் தூக்கியெறியப்படுவார் என்று சிறிலங்கா அரசாங்கம் பெரிதும் நம்பியிருந்தது.ஆனால் அது நடக்கவில்லை.இப்போது ஒபாமா நிர்வாகத்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து சிறிலங்கா அரசுக்கு கிடைப்பவை கெட்ட செய்திகளாகவே உள்ளனதற்போது ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவராக உள்ள சுசன் ரைஸ், அமெரிக்க இராஜாங்கச் செயலராகவும், சமந்தா பவர் ஐ.நாவுக்கான தூதுவராகவும் நியமிக்கப்பட பெரிதும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.இது நடைமுறைக்கு வந்தால், அடுத்து வரும் ஆண்டுகளில் சிறிலங்கா உண்மையிலேயே மிகவும் கடுமையான நேரத்தை எதிர்கொள்ளும்.சிறிலங்கா தொடர்பான அமெரிக்க கொள்கையை தற்போது கையாளும் இவர்கள் இருவரும் இன்னும் அதிக அதிகாரம் கொண்ட பதவிகளுக்கு வருவது திருப்பத்தை ஏற்படுத்தும்.அது சிறிலங்காவுக்கு நல்லதல்ல.அமெரிக்காவின் இந்த இரண்டு பலம்வாய்ந்த பெண்களுடன் மூன்றாவதாக ஐ.நாவில் உள்ள நவநீதம்பிள்ளையின் சவாலையும் சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.இவர்கள் மூவரும் சிறிலங்கா மீது கடும்போக்கை வெளிப்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அண்மையில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஒருவரிடம், அவருக்கு நெருக்கமான சோதிடர் ஒருவர், மகிந்த ராஜபக்சவின் ஆட்சி பெண் ஒருவரால் தான் வீழ்ச்சி காணும் என்று கூறியுள்ளார்.சிறிலங்கா அதிபரின் ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடுகளால் சுசன், ரைஸ், சமந்தா பவர், நவநீதம்பிள்ளை, சோனியா, இப்போது சிராணி பண்டாரநாயக்க என்று பெண்களின் பகையை சம்பாதித்துள்ளார்.சோதிடம் அறிவியல்பூர்வமான உண்மையாக ஏற்றுக் கொள்ளப்படாது போனாலும், மகிந்த ராஜபக்ச சக்திவாய்ந்த பெண்களின் சவால்களை பலமுனைகளில் எதிர்கொண்டுள்ளதால் அவர் இறுக்கமான நேரத்தை எதிர்கொள்ளவுள்ளார்” என்று உபுல் ஜோசப் பெர்னான்டோ குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக