வியாழன், 29 நவம்பர், 2012

ஷிரானிக்கு மரியாதை அளிக்க வேண்டாமென காவல்துறைக்கு அரசு உத்தரவு: சுமந்திரன் குற்றச்சாட்டு

News Serviceபிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு மரியாதை அளிக்க வேண்டாம் என காவல்துறையினருக்கு அரசாங்கம் உத்தரவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளில் ஆஜராகிய போது காவல்துறையினர் பிரதம நீதியரசருக்கு மரியாதை அளிக்கத் தவறியதாகக் குறிப்பிட்டுள்ளார். வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் பாராளுமன்றிற்கு சமூகமளித்த போது காவல்துறையினர் மரியாதை செலுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்திற்கு தேவையானவற்றை நீதிமன்றம் செய்யத் தவறிய காரணத்தினால் இவ்வாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக