சனி, 17 நவம்பர், 2012

விடுதலைப் புலி கைதிகள் தொடர்பில் பூரண அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் வாசுதேவ கோரிக்கை


தமிழீழ விடுதலைப் புலிக் கைதிகள் தொடர்பில் பூரணமாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளரிடம் கோரியுள்ளார்.

விடுதலைப் புலி கைதிகள் தொடர்பில் பூரண அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் வாசுதேவ கோரிக்கை

தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல விடுதலைப் புலி உறுப்பினர்கள் பற்றிய விபரங்களையும் வெளியிடுமாறு அவர் கோரியுள்ளார்.

அண்மையில் சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்த போது தமிழ் கைதிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யுத்தம் நிறைவடைந்து மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமக்கு எதிராக வழக்குத் தொடராமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சில கைதிகள் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைதிகள் தொடர்பில் துரித கதியில் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக