வியாழன், 22 நவம்பர், 2012

தெரிவுக்குழு விசாரணைகளை நிறுத்துவது பொருத்தமானது உயர்நீதிமன்றம் தீர்ப்பு:-

ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் -நாடாளுமன்ற மற்றும் நீதிமன்றம் ஆகிய இரண்டு நிறுவனங்களின் நெருங்கிய தொடர்புகள், கௌரவம் என்பன பாதுகாக்கப்படும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால், பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு விசாரணைகளை நிறுத்துவது பொருத்தமானது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் மனுக்கள் தொடர்பில் முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதால், அந்த மனுக்களின் தீர்ப்புகள் வழங்கப்படும் வரை விசாரணை நிறுத்துமாறு உயர்நீதமன்றம் நாடாளுமன்றத்தை கேட்டுள்ளது.

நாளைய தினம் கூடவுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கு பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விசாரணை நடத்த அதிகாரமில்லை என்பதால், அதற்கு எதிராக தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, அனைத்து நிறுவனங்களின் ஊழியர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரிய சேவை சங்கம் என்பன நேற்று (21) தாக்கல் செய்த மனுக்கள் இன்று (22) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே உயர்நீதிமன்றம் இந்த கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற தெரிவுக்குழு நாளைய தினம் கூடவிருந்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக