இலங்கையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ் திஸ்ஸநாயகத்தை அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று கௌரவித்துள்ளது. தி நெஷனல் என்டோவ்மன்ட் (என்.ஈ.டி) என்ற அமைப்பே இவ்வாறு திஸ்ஸநாயகத்தை கௌரவித்துள்ளது.

ஜனநாயகத்தை நிலைநாட்டக் குரல் கொடுக்கும் விசேட பிரதிநிதியாக திஸ்ஸநாயகத்தை என்.ஈ.டி நிறுவனம் நியமித்துள்ளது. தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் ஜனநாயகத்தை வலுப்படு;த்த சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் ஆராயவுள்ளார்.
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன முரண்பாட்டை தூண்டும் வகையில் தகவல்களை வெளியிட்ட குற்றத்திற்காக ஊடகவியலாளர் ஜே.எஸ் திஸ்ஸநாயகத்திற்கு 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, திஸ்ஸநாயகத்திற்கு பொது மன்னிப்பு வழங்கியிருந்தார். ரீகன் பெசல் பிலோஷிப் திட்டத்தன் தென் ஆசிய பிராந்திய வலய பிரதிநிதியாக திஸ்ஸநாயகம் பெயரிடப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக