வெள்ளி, 14 டிசம்பர், 2012

காலை உணவும் தயார் செய்யப்பட்டிருந்தது! ஆனால் பேச வருவதாக கூறிய சம்பந்தன் வரவில்லை!- ஜனாதிபதி

தமிழ்க் கூட்டமைப்பு முன்வந்தால் தீர்வுப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும். அண்மையில் கூட சம்பந்தன் வருவேன் என்று கூறியிருந்தார். காலையுணவு கூடத் தயார் செய்யப்பட்டு அவர் வருவாரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லையே என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.பத்திரிகை மற்றும் மின்னியல் ஊடகங்களின் ஆசிரியர்களை நேற்றுக்காலை அலரிமாளிகையில் சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்போது ஜனாதிபதியிடம் அரசு கூட்டமைப்பு பேச்சு பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அப்போதே மேற்கண்ட பதிலை வழங்கிய ஜனாதிபதி, தமிழ்க் கூட்டமைப்பினர் பேச்சுக்கு வரவேண்டு மென்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டார்.
சம்பந்தன் என்னுடன் பேச வருவதாக சொல்லியிருந்தார். அவர் வருவாரெனக் காலையுணவும் தயார்செய்யப்பட்டிருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் அவர் வரவில்லை.
புலம்பெயர் தமிழர்கள் திட்டுவார்கள் என்று பயந்துவிட்டார் போலும் என்றும் குறிப்பிட்டார் ஜனாதிபதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக