ஈ.பி.டி.பி கட்சி பிரதேச ரீதியாக தமக்குச் சார்பானவர்களை சிபாரிசு செய்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனால் உண்மையான பயனாளிகள் பாதிக்கப்படுவதாகவும் தவிசாளர்கள் குற்றம்சுமத்த்pயுள்ளனர்.
கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு இந்திய அரசின் உதவியுடன் வீட்டுத்திட்டம் வழங்கும் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வீட்டுத்திட்டத்திலேயே மேற்படி தலையீடு ஏற்பட்டுள்ளதாக தவிசாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்களை முன்னிலைப்படுத்தி நடைமுறைப்படுத்துகின்ற இத்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கான பயனாளிகள் தெரிவு இடம்பெற்றுவருகின்றது.
ஆயினும் இப்பணிகள் எதிர்பார்த்ததைப் போலன்றி பெரும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தியிருந்தது. அதாவது பயனாளிகள் தெரிவில ;குழப்பம் மற்றும் ஒப்பந்தகாரர்கள் இழூத்தடிப்பு என பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தன.
மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவுறுத்தப்படாமலும் இழூத்தடிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் இதன் முதற்கட்டப் பணிகள் நிறைவு பெறாமலுள்ள அதே நேரம் இதன் இரண்டாம் கட்டப்பணிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டாம் கட்டப் பணிகளின் போது பயனாளிகள் தெரிவு தற்போது நடைபெற்று வருகின்றது. பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தற்போது நடைபெற்று வருகின்ற இத் தெரிவின் போது பல முறைகேடுகள் இடம்பெற்று வருகின்றதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டுத் திட்டத்தை வைத்து அரசசார்ந்த அரசியல் வாதிகள் மக்களை ஏமாற்றி வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதாவது இந்த வீட்டுத்திட்டத்தினை தாமே நடைமுறைப்படுத்துவதாகவும் தங்களிற்கும் தெரிவு தொடர்பில் அறிவிக்குமாறும் கேட்டுள்ளனர்.
ஆயினும் இந் நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகளிருக்கக் கூடாதென்பதையே மக்கள் விரும்புகின்றனர். எனவே இதணை உணர்ந்து அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும். அப்பொது தான் சிறந்த பயனை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆயினும் இத்தனால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் பிரதேச செயலகங்களுடனும் யாழ் மாவட்டச் செயலகத்துடனும் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதே வேளை இந்திய அரசின் வீட்டுத்திட்டம் தொடர்பில் பாதிக்கப்படுகின்ற மக்கள் நேரடியாகவே மாவட்டச் செயலகத்திற்கு அறிவிக்கலாம். ஆனால் இதுவரை யாரும் அவ்வாறு அறிவிக்கவில்லை. இந்நிலையில் பாதிக்கப்படுகின்ற மக்கள் அறிவிக்குமிடத்தே உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் யாழ் அரச அதிபர் அறிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக