ஞாயிறு, 9 டிசம்பர், 2012

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் மன்னார் மக்களுக்கு பாரபட்சம் இழைக்கப்பட்டு வருகின்றது. திட்டம் தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் மன்னார் மக்களுக்கு பாரபட்சம் - செல்வம் எம்பி கவலை மன்னாரில் இந்திய வீடமைப்புத் திட்டப் பங்கீட்டில் சமபங்கு பேண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்’ சில அரசியல்வாதிகளின் தலையீட்டினைத் தடுக்க வேண்டு மெனவும் சுட்டிக்காட்டினார்.

இந்திய வீடமைப்புத்திட்டத்தின் கீழ் மன்னாரில் இடம் பெயர்ந்த மக்களுக்கு வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பகிர்ந்தளிக்கப்பட்ட 380 வீடுகளில் 256 வீடுகள் முஸ்லிம்களுக்கும் 124 வீடுகள் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதில் பெரிய அநியாயம் நடைபெற்றுள்ளது.

தமிழ் மக்களைப் போன்று முஸ்லிம்களும் இடம்பெயர்ந்தவர்கள் என்பது மறுப்பதற்கில்லை. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பகிர்ந்தளிப்பதில் விகிதாசாரம் பேணப்பட வேண்டும் அல்லது இரண்டு சமூகங்களுக்கும் சமமான பகிர்வு இடம்பெற வேண்டுமென்றே நாம் கோருகின்றோம். இந்த விடயங்களில் அரசியல் வாதிகளின் தலையீட்டை நாம் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக