இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசியம் தொடர்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்காகவே, கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் மீதான சேறு பூசும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்று முன் நாள் எம்.பி சந்திரகாந்தன் சந்திரநேரு தெரிவித்துள்ளார். அதாவது சம்பந்தர் ஐயா புலிகளைப் பற்றி கூறியதும், யாழில் சிங்கக் கொடியை உயர்த்திக் காட்டியதுக்கும் சிலர் புது விளக்கங்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். அது என்னவென்றால், நாம் தவறாக விளங்கிக்கொண்டு விட்டோம், என்று கூறுகிறார்கள், சம்பந்தன் ஐயாவின் அடிவருடிகள். எப்படி என்றாலும் (கண்மூடித்தனமாக) அவர் பேச்சை நியாப்படுத்தவே இவர்கள் விரும்புகிறார்கள்.வெள்ளைக் கொடி விவகாரத்தில், தான் புலித்தேவன், மற்றும் ப.நடேசன் ஆகியோருடன் தான் பேசியதாகவும், பின்னர் கோத்தபாயவுடனும் தொடர்புகொண்டதாகத் தெரிவித்த சந்திரகாந்தன் சந்திரநேரு, இவர்கள் கொல்லப்பட்ட பின்னர், தன்னை கோத்தபாய மிரட்டியதாகவும், இதன் காரணமாகவே தான் லண்டனுக்கு ஓடிவந்ததாகவும் பல தடவைகள் கூறியுள்ளார். ஆனால் பின்னர் அவர் இலங்கை சென்று வந்துள்ளார் என்ற செய்திகளும் பலவராக அடிபட்ட வண்ணம் உள்ளது. இதேவேளை இவர் தற்போது சம்பந்தன் ஐயாவைக் காப்பாற்ற களமிறக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் மெளனமாக இருந்த சந்திரநேரு, தற்போது சம்பந்தன் ஐயாவைக் காப்பாற்ற முனைவது ஏன் ? இதனை இவர் யார் சொல்லிச் செய்கிறார் என்ற சந்தேகங்களும் வலுப்பெற்றுள்ளது.
லண்டன் மற்றும் கனடா போன்ற நாடுகளில் இருந்து, புலம்பெயர் தமிழர்கள் பலர், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நிதி கொடுத்து வருகின்றனர். இவர்களில் பலர் நிதி சேகரித்து அனுப்பியும் வருகின்றனர். இவர்கள் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நிதி சேகரிக்க முடியாத நிலை காணப்படுகிறது. காரணம் சம்பந்தன் ஐயா அவர்களின் பேச்சு தான். இவர்கள் முதலில் ஒரு விடையத்தை நன்கு அறியவேண்டும். அதாவது புலம்பெயர் தமிழ் மக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது அதிருப்த்தியடையவில்லை. சம்பந்தன் ஐயா அவர்கள் பாராளுமன்றில், அதுவும் சிங்களவர் முன் நிலையில், புலிகளைப் பற்றி தெரிவித்த கருத்து தொடர்பாகவே பலர் அதிருப்த்தியடைந்துள்ளார்கள். ஆனால் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவதுபோல, சிலர் தமிழ் தேசிய கூட்டமைபின் மீது தமிழர்கள் அத்திரமடைந்துள்ளதாக கருத்தை தெரிவிப்பது, மக்களை திசை திருப்பும் நோக்கில் அமைந்துள்ளது. இல்லாத ஒரு புனை கதைதை இவர்கள் இயற்றிவருகிறார்கள் !
மக்கள் மிகவும் தெளிவாகத் தான் இருக்கிறார்கள். சம்பந்தர் ஐயா அவர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு மட்டுமே , தமிழ் மக்கள் தற்போது கடும் அதிருப்த்தியடைந்துள்ளார்களே தவிர இவர்கள் சொல்வதைப் போல எவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராகத் திரும்பவில்லை. கட்சித் தலைவருக்கு அறளைபெயர்ந்தால், அவரை மாற்றுவது நல்லது. இளையோர்களுக்கு வழிவிட்டு, ஒதுங்கிக் கொள்வது நல்லது. மரியாதையாவது மிஞ்சும் ! என்று தமிழ் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக