பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணையை விசாரித்த பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு இன்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.பிரதம நீதியரசர் தாக்கல் செய்திருந்த எழுத்தானை மனுவை இன்று பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த அறிவித்தலை பிறப்பித்துள்ளது.இதன்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழாம் மனுவில் கோரப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவுக்கு பதிலாக பரிந்துரையொன்றை முன்வைத்துள்ளது.
இதற்கமைய இரண்டு நிறுவனங்களுக்கும் இடையில் நல்லுறவை பேணுவதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக மேலதிகமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பதே உகந்தது என நீதிபதிகள் குழாம் பரிந்துரை செய்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக