செவ்வாய், 25 டிசம்பர், 2012

வவுனியாவில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட அமுக்க வெடிகள் - கைக்குண்டுகள்

வவுனியாவில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட அமுக்க வெடிகள் -  கைக்குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டனகடந்த நான்கு நாட்களாக பெய்த கனமழைக்காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், வவுனியா, கல்மடு நொச்சிகுளம் வீதியில் நீரில் அடித்து வரப்பட்ட 15 கிலோ கிராம் எடை கொண்ட அமுக்க வெடிக்கள் மற்றும் இரண்டு கைக்குணடு;களை வவுனியா இராணுவத்தினர், கைப்பற்றி அவற்றை செயலிழக்க செய்துள்ளனர்.
விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்ட அமுக்க வெடிகள் மழைக்காரணமாக மண்ணில் இருந்து வெளிகிளம்பி இவ்வாறு வெள்ளத்தில் அடித்து வரப்பட்டுள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரதேச மக்கள் வவுனியா காவற்துறையினருக்கு வழங்கிய தகவல் ஒன்றை அடுத்து, அங்கு சென்ற காவற்துறையினர், இந்த குண்டுகளை நேற்று கைப்பற்றி அதனை இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். மக்கள் விழிபாக இருந்ததன் காரணமாக ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக