திங்கள், 10 டிசம்பர், 2012

புதைக்கப்படாத இடத்தில் சடலத்தை தோண்டும் இலங்கை இராணுவம்: ரிபோர்ட் !

சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லப்படும் லயன் ஏர் விமானதில், பயணித்த பயணிகளின் உடலை தோண்டி எடுக்க இலங்கை இராணுவம் முயன்று வருகிறது. பலமான மீடியா பப்பிளிசிட்டியோடு, இதனை மேற்கொண்டு வரும் இராணுவத்துக்கு, உடல்கள் புதைக்கப்பட்ட இடம் இதுவரை சரியாகத் தெரியாது என்பதே உண்மையாகும். பின்னர் எப்படி இந்த உடலங்களை தோண்டும் படலம் ஆரம்பித்தது என்று கேட்கிறீர்களா ? அதாவது இராணுவ தடுப்பில் உள்ள முன் நாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவர் சித்திரவதை தாங்காமல், சில விடையங்களை இராணுவத்துக்கு தெரிவித்துள்ளார். அவ்வளவுதான். இதில் லயன் ஏர் விமனாத்தில் பயணித்த பயணிகளை புலிகள் பூனகரிக் கடற்கரையில் புதைத்தார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தை அடையாளம் காட்டியுள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியான சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் என்பவர், விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடல்கள் விடுதலைப் புலிகளால் பூநகரி கடற்கரையோரத்தில் அடக்கம் செய்தனர் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்தே இந்த தேடுதல் படலம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு உடலத்தையும் இலங்கை இராணுவம் கண்டுபிடிக்கவில்லை என்பது தான் உண்மையாகும். அன்று புதைக்கப்பட்ட சிங்களவர்களின் உடலைத் தோண்டி எடுத்து, அவர்களின், உறவினர்களிடம் கொடுப்பதன் மூலம், இலங்கை அரசானது தனது செல்வாக்கை உயர்த்த முனைவதாக, சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக