செவ்வாய், 4 டிசம்பர், 2012

சூழ்ச்சித் திட்டங்களை கண்டு அஞ்சப் போவதில்லை - யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போல் திவிநெகுமவையும் நிறைவேற்றுவோம்: - பசில் சூளுரை

News Serviceஎவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் திவிநெகும சட்டம் நிறைவேற்றப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் திவநெகுமு சட்டத்தை அமுல்படுத்தி மக்களுக்கு நன்மைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் சூழ்ச்சித் திட்டங்களை கண்டு அஞ்சப் போவதில்லை. மூன்று தசாப்த காலம் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டு வந்ததனைத் போன்றே திவிநெகும சட்டம் அமுல்படுத்தப்படும். நாட்டில் குறைந்த வருமானம் ஈட்டுவோரின் தொகை கிரமமான முறையில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. எந்தவொரு முற்போக்கான தீர்மானத்திற்கும் தடைகள் ஏற்படுத்தப்படுவது வழமையானதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யக்கல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, திவிநெகும சட்டம் எதிர்வரும் ஜனவரி 8ம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. கடந்த 30ம் திகதி சபாநாயகர் சமால் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக